நோட்டாவை தவிர்த்து நல்லவர்களை தேர்ந்தெடுங்கள்: கமல் வேண்டுகோள்!

  Newstm Desk   | Last Modified : 05 Apr, 2019 10:20 pm
this-is-not-the-election-of-the-prime-minister-kamal-hassan

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில், வாக்காளர்கள் நோட்டாவை தவிர்த்து நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈரோட்டில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் சரவணக்குமாரை  ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘இது பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அல்ல; நம்மை நாமே தேர்வு செய்வதற்கான தேர்தல். காமராஜர், எம்ஜிஆர் போன்றோர் அதிகம் படிக்காவிட்டாலும் மக்களை  நன்கு படித்தவர்கள்.

பிரதமர் யார் என்பதை தற்போதே சொல்வது ஏற்புடையதல்ல. தவறு செய்பவர்கள் திருடர்கள்தான்; தேர்தலில் வாக்காளர்கள் நோட்டாவை தவிர்த்து  நல்லவர்களை தேர்வு செய்ய வேண்டும்’ என்று கமல் வேண்டுகோள் விடுத்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close