கிருஷ்ணர் குறித்து வீரமணி பேசியது உண்மையாக இருந்தால் தவறு தான்: ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 06 Apr, 2019 11:50 am
veeramani-spoke-about-krishna-truth-it-is-wrong-stalin

கிருஷ்ணர் குறித்து திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேசியது உண்மையாக இருந்தால் தவறு தான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடவுள் கிருஷ்ணர் குறித்து கி.வீரமணி விமர்சித்தது தொடர்பாக தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘கிருஷ்ணர் குறித்து திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேசியது உண்மையாக இருந்தால் தவறு தான். கிருஷ்ணர் குறித்து வீரமணி பேசியது பெரியார் திடலில்; தேர்தல் பிரச்சாரத்தில் அல்ல. பெரியார் திடலில் வீரமணி பேசியதை  ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இயக்கங்கள் சித்தரித்து பரப்புகின்றன, திட்டமிட்டே சதி செய்துள்ளது. கிருஷ்ணர் பற்றி உதாரணங்களை மேற்கோள் காட்டிதான் வீரமணி பேசினார்; உள்நோக்கத்துடன் பேசவில்லை’ என்றார்.

மேலும், பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் சொன்னதுபோல் கோவில்கள் கூடாது என்பது திமுகவின் கொள்கையல்ல, கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என்பதே திமுகவின் கொள்கை என்ற ஸ்டாலின், திமுகவில் இருப்பவர்கள் 90 சதவீதம் இந்துக்கள்தான் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close