மதுரையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் தமிழாக்கத்தை வெளியிட்டார் ப.சிதம்பரம்!

  Newstm Desk   | Last Modified : 06 Apr, 2019 11:42 am
p-chidambaram-releases-congress-manifesto-tamil

 

2019 மக்களவைத் தேர்தலையடுத்து, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் தமிழாக்கம் இன்று மதுரையில் வெளியிடப்பட்டுள்ளது.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், தேர்தல் அறிக்கையின் தமிழாக்கத்தை முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழுத் தலைவருமான ப. சிதம்பரம் வெளியிட்டார். 

2019 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, தனது தேர்தல் அறிக்கையை கடந்த ஏப்ரல் 2ம் தேதி டெல்லியில் வெளியிட்டது. அந்த தேர்தல் அறிக்கை இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இருந்தது. இதையடுத்து தேர்தல் அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும் என தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களர் முடிவெடுத்தனர். அதன்படி, தேர்தல் அறிக்கை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இன்று தேர்தல் அறிக்கையின் தமிழாக்கம் மதுரையில் வெளியிடப்பட்டுள்ளது. 

மதுரை தெப்பக்குளத்தில் உள்ள ஏ.டி.ஆர் திருமண மண்டபத்தில் வைத்து, முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழுத் தலைவருமான ப. சிதம்பரம் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close