சூறாவளியையே காணவில்லையே கமல்; பொன்னார் கிண்டல்

  Newstm Desk   | Last Modified : 06 Apr, 2019 01:03 pm
hurricane-missing-kamal-abcd-is-also-unknown-vasanthakumar

தேர்தலில் கமல்ஹாசன் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட சூறாவளியையே காணவில்லை என்று கன்னியாகுமாரி தொகுதிக்கான பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கிண்டல் செய்து பேசியுள்ளார்.

நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கன்னியாகுமாரி தொகுதிக்கான பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘தேர்தலில் கமல்ஹாசன் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஆனால்,  தமிழகத்தில்ஒரு இடத்தில் கூட சூறாவளியையே காணவில்லை. மக்கள்  நீதி மய்யத்தை வளர்க்கும் வழியை கமல்ஹாசன் பார்க்க வேண்டும்’ என்று கிண்டல் செய்துள்ளார்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டம் குறித்து ஏபிசிடி கூட தெரியாதவராக காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் இருக்கிறார் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close