தரக்குறைவாக பேசுவது ஸ்டாலினுக்கு அழகல்ல: முதல்வர் பழனிசாமி

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 03:33 pm
it-is-not-good-for-stalin-to-speak-up

முறையாக விமர்சிக்காமல் தரக்குறைவாக பேசுவது ஸ்டாலினின் தலைமைப் பண்புக்கு அழகல்ல என்று முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

திண்டுக்கல்லில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து முதல்வர் பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய முதல்வர், ‘முறையாக விமர்சிக்காமல் தரக்குறைவாக பேசுவது ஸ்டாலினின் தலைமைப் பண்புக்கு அழகல்ல. நடக்காத விஷயங்களை  நடப்பது போலவே, ஸ்டாலின் பேசுகிறார். அவர் எல்லைமீறி பேசும்போது  நாங்களும் பதில் பேச வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டிலேயே, தமிழ்நாட்டில் மட்டுமே, வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுவதாக தெரிவித்த முதல்வர், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இல்லை என ஸ்டாலின் கூறுகிறார். அவர் சுதந்திரமாக மேற்கொள்ளும் நடைபயணமே சட்டம் - ஓழுங்கு சிறப்பாக இருப்பதற்கு சான்று என்றும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close