காங்கிரஸ் - திமுக கூட்டணியில் பலர் சிறையிலும், பலர் ஜாமீனிலும் உள்ளனர்: ராஜ்நாத்சிங்

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 05:24 pm
congress-dmk-alliance-is-many-are-in-jail-rajnath-singh

காங்கிரஸ் - திமுக கூட்டணி மூழ்கும் கப்பல் என்று, அதிமுக வேட்பாளரை ஆதரித்து பெரம்பலூரில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விமர்சித்துள்ளார்.

பெரம்பலூரில் இன்று அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.சிவபதியை ஆதரித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜ்நாத்சிங், ‘திருக்குறள், இந்த தேசத்து மக்களாகிய  நம்மை ஒருங்கிணைந்து ஒரு சக்தியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. பெரம்பலூர் பொதுக்கூட்டத்தில் முதல் முறையாக வந்து உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கலாச்சாரம், பண்பாடு மட்டுமின்றி நல்லதொரு தொழில் நகரங்களை  நிர்வகிக்கும்  மாநிலமாக தமிழகம் விளங்குகிறது’ என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்நாத்சிங், காங்கிரஸ் - திமுக கூட்டணி மூழ்கும் கப்பல் என்று விமர்சித்தார்.  ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்படும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் இருந்து துடைத்தெறியப்படும் என்றும், காங்கிரஸ் - திமுக கூட்டணியில் பலர் சிறையிலும், பலர் ஜாமீனிலும்  உள்ளனர் எனவும் கூறியுள்ளார். 

இந்த கூட்டணி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அல்ல; ஊழல்  நிறைந்த கூட்டணி என்ற அமைச்சர், கூடா நட்பு கேடாய் முடியும் என காங்கிரஸ் கூட்டணி பற்றி கருணாநிதியே கூறியுள்ளார் என்றும் தெரிவித்தார்.

மேலும், தீவிரவாதத்தை பொறுத்துக் கொள்ளும் அரசாக மத்திய பாஜக அரசு இல்லை, மற்ற நாடுகளின் மீது தாக்குதல்  நடத்த வேண்டும் என்பது இந்தியாவின்  நோக்கம் இல்லை என்ற அவர், நம் மீது தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா தாக்குதல்  நடத்தும் என்றும் கூறியுள்ளார்.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close