மதுரைக்கு செல்ல பயந்தவர் தான் ஸ்டாலின்: முதல்வர் பழனிசாமி சாடல்!

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 08:24 pm
pollachi-incident-is-cm-palanisami-feeling

திமுக ஆட்சியில் இருந்தபோது மதுரைக்கு செல்ல பயந்தவர் தான் ஸ்டாலின் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாடினார்.

பொள்ளாச்சியில் முதல்வர் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், " பொள்ளாச்சியில் நிகழ்ந்த சம்பவம் துரதிர்ஷடவசமானது; வேதனை அளிக்கிறது. பொள்ளாச்சி விவகாரத்தை வைத்து, சில அரசியல் வியாபாரிகள் அரசியல் செய்து வருகிறார்கள். தவறு செய்பவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதே அதிமுக அரசின் தலையாய கடமை. பாலியல் கொடுமைகள் இனி இருக்கக் கூடாது என்பதே அதிமுக அரசின்  நிலைப்பாடு.

ஸ்டாலின் பண்பில்லாத அரசியல்வாதி; கண்ணியக் குறைவாக பேசுபவர். வரம்புமீறி பேசினால் அதற்கானதை ஸ்டாலின் வாங்கிக் கொள்வார். ஏதோ கிடைத்த கதையை பெரிதாக்கி, வசனம் எழுதி அவர் பேசி வருகிறார். திமுக ஆட்சியில் இருந்தபோது மதுரைக்கு செல்ல பயந்த ஸ்டாலின், சட்டம் -ஒ ழுங்கை பற்றி பேசுகிறார்" என்றார் முதல்வர் பழனிசாமி.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close