நாட்டை பாதுகாப்பவர்... நாட்டை விற்பவர்... யார் தேவை? : பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

  Newstm Desk   | Last Modified : 07 Apr, 2019 09:44 pm
premalatha-vijayakanth-election-campaign-at-kovilpatti

தங்களுக்கு நாட்டை பாதுகாப்பவர் தேவையா? அல்லது நாட்டை விற்பவர்கள் தேவையா? என்பதை வாக்காளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

தூத்துக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து அவர், கோவில்பட்டியில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், " தங்களுக்கு எம்.பி. வேண்டுமா?, மத்திய அமைச்சர் வேண்டுமா? என்பதை தூத்துகுடி மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.அதேபோன்று, நாட்டை பாதுகாப்பவர் மீண்டும் பிரதமராக வேண்டுமா? அல்லது நாட்டை விற்பவர்கள் தங்களுக்கு தேவையா? என்பதையும் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஈழப் படுகொலைக்கு காரணமானவர்களுக்கு ஒரு வாக்குக்கூட கிடைக்கக்கூடாது" என்று அவர் வலியுறுத்தினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close