ஸ்டாலின் பொய் பேசுகிறார் : முதல்வர் சாடல்

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 07:10 pm
stalin-speaks-lies-karunanidhi-is-a-conscience-cm-palanisami

வழக்குகள் நிலுவையில் இருந்ததால்தான் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என கூறினோம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி, அவிநாசியில் இன்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, "‘வழக்குகள் நிலுவையில் இருந்ததால் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என கூறினோம். அதையடுத்து, அரசியல் தலைவரின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்குவது தொடர்பான அனைத்து வழக்குகளையும் இரவோடு இரவாக வாபஸ் பெற்றனர்.

உடனே, கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அரசு சார்பில் 2 ஏக்கர் நிலம் கொடுத்தோம். ஆனால், கருணாநிதிக்கு இடம் கொடுக்க அரசு மறுத்துவிட்டதாக ஸ்டாலின் தற்போது பொய் பேசி வருகிறார்" என்று முதல்வர் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close