எதிரணியினர் பிரதமர் வேட்பாளரை தேடிக் கொண்டிருக்கின்றனர் : முதல்வர்  கிண்டல்

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 08:14 pm
kovai-pm-modi-participating-election-campaign-meeting

மக்களவைத் தேர்தலில், எதிரணியினர் பிரதமர்  வேட்பாளரை தேடிக் கொண்டிருக்கின்றனர் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிண்டலாக கூறினார்.

பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், கோவை கொடிசியா மைதானத்தில் தற்போது  நடைபெற்று வருகிறது.

முன்னதாக இக்கூட்டத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியது:
மக்களவைத் தேர்தலில், எதிரணியினர் பிரதமர் வேட்பாளரை தேடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், 130 கோடி மக்களும் ஏற்றுகொண்டுள்ள பிரதமராக நரேந்திர மோடி உள்ளார். நாட்டின் எதிர்காலம் சிறக்கவும், தேசம் வளம் பெறவும் மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும்.

 தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றிக் கனியை பறித்து, மோடியின் கரங்களை வலுப்படுத்துவோம்.
2ஜி ஊழல் மூலம், ஒட்டுமொத்த தமிழகத்தையே தலைக்குனிவு வைத்தவர்கள், இன்று ஊழல் குறித்து பேசுவது வேடிக்கையாக உள்ளதென முதல்வர் கூறினார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close