நான்கு தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிப்பு: என்ன காரணமென சொல்கிறார் ஸ்டாலின்!

  Newstm Desk   | Last Modified : 09 Apr, 2019 10:27 pm
stalin-comment-about-by-poll-election-for-4-constituency

நீதிமன்றத்தில் முறையிடப்பட்ட காரணத்தினாலேயே, நான்கு தொகுதிகளுக்கும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மக்களவைத் தேர்தலுடன், தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே, காலியாக உள்ள திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறிப்பிட்ட  4 தொகுதிகளுக்கும் மே மாதம் 19 -ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் இன்று திடீரென அறிவித்துள்ளது.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தமது தேர்தல் பிரசாரத்தின்போது கூறுகையில், "நீதிமன்றத்தில் முறையிட்ட பிறகுதான், தற்போது நான்கு தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி சம்பவம் குறித்து நான் தொடர்ந்து கேள்வி கேட்டு கொண்டுதான் இருப்பேன். ஏனெனில் நானுமொரு தந்தை தான். 
பிரதமர் மோடி இதுநாள்வரை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டு, தேர்தல் என்றதும், தற்போது தமிழகத்துக்கு ஓடோடி வருகிறார்" என்று ஸ்டாலின் பேசினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close