கோவையில் 24 மணிநேரமும் குடிநீர் வசதி: மநீம வேட்பாளர் உறுதி

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 09:27 pm
24-hour-drinking-water-solution-will-be-solved-candidate-mahendran

கோவை மாநகரில் 24 மணி நேர குடிநீர் கிடைக்க வசதி செய்து தரப்படும் என்று மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் ஆர். மகேந்திரன் உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில், மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், கோவையில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் ஆர். மகேந்திரன் காந்தி பார்க், பி.என். புதூர், வடவள்ளி மற்றும் புறநகர் பகுதியான வீரகேரளத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். 

அப்போது, விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், பல்வேறு திட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அப்போது, தேங்காய் மற்றும் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 20% அதிகரிக்கப்படும் என்றும், அனைத்து விவசாய நிலங்களும் பயிர் காப்பீடு திட்டத்தின் ழ் கொண்டு வரப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும், 2024 -ஆம் ஆண்டுக்குள் குடிசை  இல்லா மாவட்டமாக கோவை உருவாக்கப்படும் என்றும், தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என ஆர். மகேந்திரன் உறுதியளித்தார். அத்துடன்  2022-க்குள், கோவை மாநகரில் 24 மணிநேரமும் குடிநீர் கிடைக்க வசதி செய்து தரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close