தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை: அய்யாகண்ணு

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 09:31 pm
parties-criticize-met-for-amit-sha-ayyakannu

மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் அச்சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் இன்று நடைப்பெற்றது. 

இக்கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, ’மக்களவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் எங்கள் சங்கம் ஆதரவளிக்காது. எங்களின் போராட்டத்தினால்தான் பா.ஜ.க,, விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை தங்கள் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது. அது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

விவசாயிகளின் கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியாக அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்பு அதை நிறைவேற்றவில்லை என்றால் எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்களை எதிர்த்து போராடுவோம்.

அமித்ஷாவை நாங்கள் சந்தித்ததை சில அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்கிறார்கள். பலர் எங்கள் மீது அவதூறு பரப்புகிறார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close