மோடி புதிய பொய்களை கூறுகிறார்: மாயாவதி விமர்சனம்

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 08:32 pm
modi-says-new-lies-mayawati-campaign-in-chennai

பிரதமர் மோடி தமது குறைகளை மறைக்க, புதிய பொய்களை கூறி மக்களின் மனதை திசை திருப்ப முயற்சிக்கிறார் என்று, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. அதில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, கட்சியின் தலைவர் மாயாவதி பேசியது:

பிரதமர் மோடி தமது குறைகளை மறைக்க, புதிய பொய்களை கூறி மக்களின் மனதை திசை திருப்புகிறார். புல்வாமா தாக்குதல் சம்பவத்தின்போது கூட மோடி பிரச்சாரத்தில் தான் இருந்தார். மதவாதத்தை முன்னிறுத்தும் பாஜக மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால்  நாட்டுக்கு பின்னடைவு ஏற்படும். நாட்டின் எல்லையில் எப்போதும் பதற்றம்  நிலவுகிறது. அதனை தணிக்க பாஜக, காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மாயாவதி குற்றம்சாட்டினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close