தூத்துக்குடி தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கை : அசத்தும் பாஜக!

  Newstm Desk   | Last Modified : 10 Apr, 2019 09:22 pm
released-a-separate-election-manifesto-for-thoothukudi-constituency

தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கையை பாஜக வேட்பாளார் தமிழிசை இன்று வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், "பனைத்தொழில் உற்பத்தி பொருட்களுக்கு தனிசந்தை அமைத்து தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். தூத்துக்குடி எம்.பி.யாக தமிழிசை தேர்ந்தெடுக்கப்பட்டால், இங்குள்ள விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். தாமிரபரணி ஆற்றின் குறுக்கே மாவடி பண்ணை அருகே அணை கட்ட  நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருச்செந்தூர் பாத யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு தனி வழித்தடம் அமைக்க ஆவன செய்யப்படும். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமல்படுத்தவும், தூத்துக்குடி-திருச்செந்தூர்- நெல்லை இடையே மின்பாதை அமைத்து மின்சார ரயில் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close