ரஜினிக்கு நன்றி தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2019 02:49 pm
union-minister-piyush-goyal-thanked-rajini

பாஜகவின் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக சென்னையில் இன்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர்  பியூஷ் கோயல், ‘ பாஜகவின் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகள், மக்கள்  நலனுக்காக ரஜினி கூறிய கருத்துகளை வரவேற்கிறேன். தண்ணீர் பிரச்னைக்கு நதிகள் இணைப்பே சரியான தீர்வாக இருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் நதிகளை இணைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்றார்.

மேலும், பிரதமர் மோடி தலைமையில் அடுத்து அமையும் அரசில் தமிழக பிரதி நிதிகளின் குரல் எதிரொலிக்கும் என்ற அமைச்சர், 2022-ஆம் ஆண்டில் மீனவர்களின் வருமானம் இரட்டிப்பாகும் என்றும் தெரிவித்தார்.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close