காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ; பாஜக தேர்தல் அறிக்கை ஜுரோ:ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2019 02:52 pm
congress-election-statement-superhero-bjp-election-statement

பிரதமராக இருக்கக் கூடிய மோடி காவலாளி அல்ல, களவாணி என்று சேலம் சீலநாயக்கன்பட்டி பிரச்சார கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், 'ஏழைத்தாயின் மகனின் ஆட்சியில் நிரவ்மோடி, மல்லையா கோடிகோடியாக கொள்ளையடித்து சென்றனர். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை ரசிக்க அண்ணா இல்லையே என வருத்தப்பட்டேன்.  நாடும் நமதே  நாற்பதும் நமதே என ராகுல் காந்தியிடம்  நான் உறுதியளிக்கிறேன். ராகுல் வெளியிட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ; பாஜக தேர்தல் அறிக்கை ஜுரோ’ என்றார். 

மேலும், பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை முதல் முதலாக  நான்தான் முன்மொழிந்தேன் என்ற ஸ்டாலின், பாஜக தேர்தல் அறிக்கையில்  நீட் தேர்வு, வேலைவாய்ப்பு, குறித்து ஒரு வரியாவது இருக்கிறதா? எனவும் திமுக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close