வறுமைக்கு எதிராக சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்துகிறோம்: ராகுல் காந்தி

  ராஜேஷ்.S   | Last Modified : 12 Apr, 2019 03:29 pm
we-are-conducting-a-strike-against-poverty-rahul-gandhi

நாங்கள் வறுமைக்கு எதிராக சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்துகிறோம் என்று, சேலம் சீலநாயக்கன்பட்டியில் இன்று திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

பிரச்சாரக் கூட்டத்தில் தொடர்ந்து பேசிய ராகுல், ‘ தமிழ் மொழியையும், தமிழக மக்களையும் நாங்கள் மதிக்கிறோம். நீட்தேர்வால் தமிழகத்தைச் சேர்ந்த அறிவார்ந்த இளம்பெண் அனிதா தற்கொலை செய்து கொண்டாதாக சொன்னார்கள். நீட் தேர்வு தேவையா இல்லையா என்பதை மாநில மக்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று நாங்கள் கூறியுள்ளோம். நாங்கள் கருத்து பரிமாற்றத்தை விரும்புகிறோம்; பிரதமர் மோடி அதனை விரும்பவில்லை. பணமதிப்பிழப்பு  நடவடிக்கையால் தமிழகத்தின் ஆடை     உற்பத்தித் துறையை சீரழித்த பிரதமர் மோடி, மக்களின் பணத்தை எடுத்து அதானி மற்றும் அம்பானிக்கு கொடுப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறார்’ என்றார்.

’தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடியபோது அவர்களிடம் பேசக்கூட பிரதமர் மோடி விரும்பவில்லை. நாட்டில் உள்ள ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72,000 வழங்க முடிவெடுத்துள்ளோம். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப பெண்களின் வங்கிக் கணக்கில் உதவித் தொகை செலுத்தப்படும். பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு, நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சிகள் மற்றும் மத்திய அரசு பதவிகளில் வழங்கப்படும்’ என்றார்.

மேலும், மேட் இன் இந்தியா என்பது வெற்று அறிவிப்புதான். ஆனால், எங்கு பார்த்தாலும் சீனப் பொருட்களாகவே உள்ளன என்றும்,  நாங்கள் உண்மையாகவே மேட் இன் இந்தியா, மேட் இன் தமிழ்நாடு என்ற  நிலையை உருவாக்குவோம் என்றும் தெரிவித்த ராகுல், தொழில் தொடங்க விரும்பினால், 3 ஆண்டுகளுக்கு அனுமதி தேவையில்லை; அதன்பின் அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close