எடப்பாடி பழனிசாமி பச்சை தமிழன்..புதிதாக யாரை கொண்டு வருவார்கள்?

  முத்து   | Last Modified : 12 Apr, 2019 05:54 pm
edappadi-palaniasamy-pure-tamilian-who-will-come-with-whom

கன்னியாகுமரி மாவட்டம் வாழையூத்து வயல்மலை கிராமத்தில் இன்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு மட்டுமல்ல; பெண் தலைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. பாதுகாப்பு இல்லை என்பதை கர்நாடகாவில் குஷ்பு மீதான பாலியல் தொந்தரவு காட்டுகிறது’என்றார்.

தமிழகத்தை தற்போது ஆட்சி செய்து வரும் எடப்பாடி பழனிசாமி பச்சை தமிழன். தமிழகத்தை தமிழர் ஆளும்போது புதிதாக யாரை கொண்டு வருவார்கள்? என்று "தமிழகத்தை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என ராகுல் காந்தி கூறியதற்கு" பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சியினருக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு நடத்தப்படுவதாக கேட்ட கேள்விக்கு நோய் யாரிடம் உள்ளதோ அவர்களிடம் தான் ஆபரேஷன்  நடக்கும் என்றும் பதில் அளித்தார்.

மேலும், யாருடைய ஆட்சியில் எமர்ஜென்சி என்பதை அறிந்தால் சர்வாதிகார ஆட்சி யாருடையது என்பது தெரியும் என்றும், மாநில அரசுகளை மத்திய அரசு இதுவரை கட்டாயப்படுத்தியதில்லை எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close