மோடிக்கு தமிழகத்தின் வரலாறு தெரியாது; ராகுல்

  ராஜேஷ்.S   | Last Modified : 12 Apr, 2019 07:26 pm
modi-does-not-know-the-history-of-tamil-nadu-i-do-not-know-the-sense-of-tamil-language

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தமிழக மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று, தேனியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிராச்சாரம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிரச்சாரக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: யாரும் தமிழகத்தின் மீது எதையும் திணிக்க முடியாது. மோடி என்பவருக்கு தமிழகத்தின் வரலாறு தெரியாது; தமிழ் மொழியின் உணர்வு பற்றியும் தெரியாது.

தமிழகத்தை புரிந்துக் கொள்ள பெரியார், கருணாநிதியின் புத்தகங்களை மோடிக்கு பரிசாக கொடுக்க விரும்புகிறேன். உலகத்தின் தமிழக மக்களின் விருப்பத்தை மீறி எதையும் செய்ய வைக்க முடியாது. தமிழக மக்களை மோடி அவமரியாதை செய்வதை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் ராகுல் அவர் ஆற்றிய தேர்தல் பிரச்சாரத்தின்போது தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close