கருணாநிதியின் மறைவுக்குபின் திமுகவின் வாக்கு வங்கி குறைந்துவிட்டது; அதனால்தான் அவர்கள் தேர்தலில் கூட்டணி வைத்துள்ளனர் என்று, கடலூரில் இன்று அமமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும், அரசியலுக்கு சாதி, மதம் தேவையில்லை; யாருடைய சாதியையும் மதத்தையும் புண்படுத்தக்கூடாது என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
முன்னதாக புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்ட தினகரன், புதுச்சேரியின் இரண்டு சாமிகளையும் நம்பவேண்டாம் என நாராயணசாமி, ரங்கசாமி ஆகிய இருவரை மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
newstm.in