நாளை நமதே; நாற்பதும் நமதே - தமிழில் கூறிய பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 13 Apr, 2019 12:57 pm
pm-modi-speech-at-theni

மக்களவைத் தேர்தலையொட்டி, தேனி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிமுக - பாஜக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளும் பொருட்டு, பிரதமர் மோடி முதலாவதாக இன்று தேனிக்கு வருகை தந்தார். துணை முதல்வர் ஓபிஎஸ், முதல்வர் இபிஎஸ் பேசி நிகழ்ச்சியை தொடங்கி வைக்க, தொடர்ந்து பிரதமர் மோடி  உரையாடினார். 

அவர் பேசியதாவது: 

'தமிழ் மக்களே, எனது அன்பான வணக்கம்' என்று தமிழில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி, நாளை தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, அனைத்து தமிழ் மக்களுக்கும், தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றும் தமிழில் கூறினார்.

"அதேபோன்று நாளை அம்பேத்கர் அவர்களின் பிறந்ததினம். இந்தத் தருணத்தை அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். இந்த மைதானத்தில் வெப்பமும் அதிகமாக இருக்கிறது, அதே நேரத்தில் உற்சாகமும் அதிகமாக இருக்கிறது. நான் வரும் போதே உங்களது உற்சாகத்தை பார்த்தேன். எனக்கு ஆசி வழங்க, இங்கு ஏராளமானோர் திரண்டுள்ளனர். அனைவருக்கும் நன்றி" என்றும் கூறினார். 

"நாளை நமதே; நாற்பதும் நமதே" என்று பிரதமர் மோடி தமிழில் கூற, கூட்டத்தில் மக்கள் ஆர்ப்பரித்தனர். 

தொடர்ந்து, "இன்று ஜாலியான வாலாபாக் படுகொலையின் 100வது ஆண்டு நினைவு தினம். உயிர் நீத்த நமது தலைவர்கள், மக்களுக்கு இந்நாளில் மரியாதையை செலுத்துகிறேன்" என்றார். 

இயற்கை அழகு மிகுந்த மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இருக்கிறோம். ஆன்மிகம், கலை, இசை மிகுந்த பகுதி இது. கடவுள் சுந்தர மகாலிங்கம் அருள் பாலிக்கும் இடம். இந்த இடத்தில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close