"என்னை தோற்கடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் துடிக்கிறார்கள்" - தேனியில் பிரதமர் மோடி பேச்சு!

  Newstm Desk   | Last Modified : 13 Apr, 2019 12:55 pm
pm-modi-speech-at-theni

மக்களவைத் தேர்தலையொட்டி, தேனி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிமுக - பாஜக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளும் பொருட்டு, பிரதமர் மோடி முதலாவதாக இன்று தேனிக்கு வருகை தந்தார். 

முதலில், துணை முதல்வர் ஓபிஎஸ், முதல்வர் இபிஎஸ் பேசி நிகழ்ச்சியை தொடங்கி வைக்க, தொடர்ந்து பிரதமர் மோடி உரையாற்றினார். 

அவர் பேசியதாவது: 

ம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். இந்த இரு தலைவர்களால் தேசம் பெருமைகொள்கிறது. 

நீங்கள் என் மீது காட்டும் அன்பிற்க்கும், பாசத்திற்கும் நான் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று 2014ம் ஆண்டு கூறினேன். அதன்படி, நாம் புதிய இந்தியாவை உருவாக்கும் கனவை நோக்கி செல்கிறோம். விவசாயி முதல் ராணுவ வீரர் வரை அனைவருக்கும் இங்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ஒரு புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு தொடர்ந்து அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளது. 2ஜி ஊழல் வழக்கை இப்போது நான் நினைவு கூற விரும்புகிறேன். இவர்கள், ஊழலுக்கு எதிராக செயல்படுவதோடு மட்டுமின்றி, ஊழலை ஒழிக்க பாடுபடும் மோடியை தோற்கடிக்க வேண்டும் என்று நினைத்து அவர்கள் ஒன்றுசேர்ந்துள்ளார்கள். அவர்களின் முயற்சியை முறியடிக்க வேண்டும். 

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த ஸ்டாலினின் கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டணி கட்சிகள் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால், அவர்களே பிரதமராகும் கனவில், வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார்கள். 

ஒருபக்கம் தந்தை ஒருவர் நிதியமைச்சராக இருக்கிறார், மகன் கொள்ளையடிக்கிறார். காங்கிரஸ் கூட்டணி கட்சி எப்போதெல்லாம் ஆட்சியில் இருக்கிறார்களோ அப்போதெல்லாம் கொள்ளையடிக்கிறார்கள்; ஏழைகளுக்குககான பணத்தை அவர்கள் தேர்தலுக்காக பயன்படுத்துகிறார்கள். தற்போது அவர்களின் ஊழலை 'துக்ளக் சாலை ஊழல்' என்ற பெயரில் மக்கள் பேசி வருகிறார்கள். டெல்லி துக்ளக் சாலையில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியும்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close