வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 13 Apr, 2019 12:56 pm
modi-speech-at-theni

மக்களவைத் தேர்தலையொட்டி, தேனி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிமுக - பாஜக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளும் பொருட்டு, பிரதமர் மோடி முதலாவதாக இன்று தேனிக்கு வருகை தந்தார். 

தேனி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: 

திமுகவை பொறுத்தவரை, அவர்கள் சிறுபிள்ளைத்தனமாக சில செயல்களை செய்கிறார்கள். திருட்டுத்தனம் செய்கிறார்கள். காவலாளியான என்னிடம் அவர்கள் ஒருநாள் பிடிபட்டுவிடுவார்கள். என்ன திருட்டுத்தனம் செய்தாலும் அவர்களை நான் பிடித்துவிடுவேன். 

அவர்களின் வாரிசு அரசியலுக்கு, குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஊழல் நடக்கிறது. நான் தீவிரவாதத்தை ஒழிக்க நினைப்பதை தடுக்கிறார்கள். துணிச்சல் மிக்க வீரர் அபிநந்தனை மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அபிநந்தன் விவகாரத்தை காங்கிரஸ் அரசியலாக்குகிறது. 

காங்கிரஸூம், நேர்மையின்மையும் நண்பர்கள். ஆனால் தவறுதலாக சில நேரங்களில் உண்மையை பேசி விடுகிறார்கள்.  அனைவருக்குமான நீதி, நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறுகிற காங்கிரஸ் கட்சி,  கடந்த 60 ஆண்டுகளில், மக்களுக்கு அநியாயமும், அநீதியும் தான் இழைத்துள்ளது. 

1984ம் ஆண்டு சீக்கியர்கள் மீது தாக்குதல், தலித் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை, போபால் விபத்தில் பலியான மக்களுக்கு எல்லாம் யார் நீதி வழங்குவார்கள்? தமிழகத்தில் ஒரு குடும்பத்துக்கு எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சியை கலைத்தார்களே? எம்.ஜி.ஆருக்கு யார் நியாயம் வழங்குவார்கள்?" என்று பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close