மோடியை வெறுப்பதாக நினைத்து நாட்டை வெறுக்கிறார்கள்: ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி பேச்சு

  ராஜேஷ்.S   | Last Modified : 13 Apr, 2019 02:12 pm
modi-hates-the-country-for-hating-modi-prime-minister-modi-talks-in-ramanathapuram

மோடியை வெறுக்கிறோம் என்று கூறி, எதிர்க்கட்சிகள் நாட்டையே வெறுக்கிறார்கள் என்று, ராமநாதபுரத்தில் இன்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். 

எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், நயினார்  நாகேந்திரன், மனோஜ் பாண்டியனை ஆதரித்து ராமநாதபுரத்தில் பிரதமர்  நரேந்திர மோடி பிரச்சாரம் கூட்டத்தில் பேசினார்.

அதில், ’ராமநவமியையொட்டி ராம நாதபுரத்தில் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  நம்பிக்கையின் அடிப்படையில் காசியும், ராமநாதபுரமும் இணைக்கப்பட்டுள்ளது. அப்துல் கலாமின் கனவுகளை  நனவாக்கி இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அப்துல் கலாம் இருந்திருந்தால் மிஷன் சக்தி திட்டம் பற்றி மகிழ்ச்சி அடைந்திருப்பார். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை அரசுமுறை உறவுகளை பயன்படுத்தி விடுவித்துள்ளோம்.

மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களுக்கு புதிய அமைச்சகம் கொண்டு  வரப்படும். விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு திட்டம் மீனவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். நீர் மேலாண்மைக்காக தனி அமைச்சகம் அமைக்கப்படும். மூக்கையூர், பூம்புகார் துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்’ என்றார்.

மேலும், ’மோடியை வெறுக்கிறோம் என்று கூறி, எதிர்க்கட்சிகள் நாட்டையே வெறுக்கிறார்கள். சர்ஜிக்கல்  ஸ்டிரைக் நடத்தியபோது, ராணுவத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அவமதித்தது. சபரிமலை விவகாரத்தில் காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சியும் கலாச்சாரத்தை அழிக்க நினைக்கின்றன. பாஜக இருக்கும் வரை அய்யப்ப பக்தர்களின் நம்பிக்கை பாதுகாக்கப்படும்.

காங்கிரஸ் குடும்ப அரசியல் செய்கிறது. டெல்லியில் ஒரு குடும்பத்தை சார்ந்தவர்களுக்கே நினைவு சின்னம் அமைக்க நிலங்கள் ஒதுக்கப்படுகிறது. பெண்களின் மரியாதை பற்றி திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு தெரியாது’ என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close