4 தொகுதி இடைத்தேர்தலில் 'நடுவிரலில் மை' வைக்கப்படும்: தேர்தல் அதிகாரி தகவல்!

  Newstm Desk   | Last Modified : 13 Apr, 2019 02:53 pm
tn-byelection-chief-election-officer-says-middle-finger-will-be-inked-for-4-assembly-byelection

தமிழகத்தில் மே 19 அன்று நடைபெறவுள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், வாக்களிப்பவர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இரண்டும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி (2ம் கட்டம்) நடைபெறவுள்ளது. தொடர்ந்து, தமிழகத்தில் மேலும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வருகிற மே 19ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. 

மக்களவைத் தேர்தலோடு, மே 23 அன்று இந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்லில், வாக்களிப்பவர்களுக்கு நடுவிரலில் மை அடையாளமாக வைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். 

வழக்கமாக, வாக்களிக்கும் நபர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும். ஏப்ரல் 18 அன்று நடைபெறும் மக்களவை தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும் என்பதால் அதையடுத்து மே 19 அன்று நடைபெறும் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்லில், வாக்களிப்பவர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close