ஜே.கே.ரித்திஷ் மரணம் உறுதியானது!

  Newstm Desk   | Last Modified : 13 Apr, 2019 07:18 pm
rithis-death-confirmed

முன்னாள் எம்.பி.,யும். நடிகருமான ஜே.கே.ரித்திஷ் மரணத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்ட நிலையில், அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ரித்திஷ். தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த அவர், லோக்சபா எம்.பி.,யாகவும் பதவி வகித்துள்ளார். தி.மு.க., மற்றும் அதிமுக என இரு கட்சிகளிலும் முக்கிய நிர்வாகியாக வலம் வந்த அவர், கடைசியாக அதிமுகவில் அங்கம் வகித்தார். 

இந்நிலையில், இன்று மதியம், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் இறந்துவிட்டதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, அவரது உடல் மருத்துவமனையில் இருந்து, அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. 

இதற்கிடையே, சற்று நேரத்தில் அவர் கண் விழித்து பார்த்ததாகவும், அவர் உயிருடன் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனால், அவரது மரணத்தில் குழப்பம் ஏற்பட்டது. 

இரண்டாவது முறையாக அவரது உடலை பரிசோதித்த மற்றொரு மருத்துவமனை மருத்துவர்கள், ரித்திஷ் உயிர் இழந்ததை உறுதி செய்தனர். இதை அவரது உறவினர்களும் உறுதிபடுத்தியுள்ளனர். இதனால், ரித்திஷின் மரணத்தில் எழுந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. 

ரித்திஷ் மரணத்திற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close