மதுரையில் பணப்பட்டுவாடா? அதிகாரிகள் சோதனை

  Newstm Desk   | Last Modified : 13 Apr, 2019 09:04 pm
ec-officials-search-in-madurai

மதுரையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில், வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தேர்தல் கமிஷன் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். 

மதுரை தெப்பகுளம் அருகே, தனியாருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில், பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை, வாக்காளர்களுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு இ - மெயிலில் புகார் வந்தது. 

இதையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள், இரண்டாவது நாளாக இன்றும் சாேதனை நடத்தினர். எனினும், குறிப்பிடும்படியான பொருட்கள் ஏதும் சிக்கவில்லை என்றே முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. 

முழு சாேதனையும் முடிவடைந்த பின், அங்கு ஏதேனும் கிடைத்ததா என்ற தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து, முக்கிய அரசியல் கட்சி நிர்வாகிகளிடமும், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close