வேண்டுமானால் என் வீட்டையும், வாகனத்தையும் சோதனை செய்யுங்கள்: செல்லூர் ராஜு அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 14 Apr, 2019 01:39 pm
madurai-rally-for-tamil-new-year-minister-sellur-raju-press-meet

வேண்டுமென்றால் என் வீட்டையும் வாகனத்தையும் சோதனை செய்யுங்கள் என்று மதுரை புத்தாண்டு பேரணியில் கலந்துகொண்ட பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் இன்று அ.தி.மு.க. சார்பில், 'சித்திரை முதல் நாள் பாரம்பரியத்தில் வேரூன்றி, நவீன மதுரையை நோக்கி..' என்ற தலைப்பில் தமிழ் புத்தாண்டு பேரணி நடைபெற்றது. மதுரை தமுக்கம் மைதானம் அருகே உள்ள, தமிழன்னை சிலைக்கு அபிஷேகம் செய்து, பொங்கல் வைத்து, பூஜை செய்து வழிப்பாடு நடத்தினர். இந்த நிகழ்வில் அமைச்சர் செல்லூர் ராஜூ, சட்ட மன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, அதிமுக மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் ராஜ் சத்யன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியில் பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம், கட்டைக் காலாட்டம், காளையாட்டம் மற்றும் ஜல்லிக்கட்டு காளையுடன் நிகழ்ச்சி நடைபெற்றது. உலகத் தமிழ்ச் சங்கம் வழியாக இலந்தை குளத்தில் உள்ள தொழில்நுட்ப பூங்காவிற்கு சென்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவம் பொறித்த முகமூடி அணிந்துகொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வின் போது, செய்தியாளர்களை சந்தித்த தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு. "தமிழ் வளர்ச்சிக்காக திமுக தற்போது எதுவுமே செய்யவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியது போல தமிழன்னை சிலை உலகத் தமிழ் சங்க கட்டடத்தில் நிறுவப்படும்" என்கிறார். 

தொடர்ந்து, "திமுகவினர் 4 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டார்களே" என்ற கேள்விக்கு? "ஆரம்பம் முக்கியமல்ல முடிவு தான் முக்கியம்" என்றார். 

பணப்பட்டுவாடா குறித்த கேள்விக்கு, "நானே மிகவும் அப்பாவியாக  இருக்கிறேன். நாங்கள் எதற்கு பணம் பட்டுவாடா செய்ய போகிறோம்.
வேண்டுமென்றால் என் வீட்டையும் வாகனத்தையும் சோதனை செய்யுங்கள். நான் ஒரு சாதாரண தொண்டனாக அதிமுகவில் பணியாற்றி வருகிறேன். தற்போது வேட்பாளர் ராஜ் சத்யனுக்கு பிரச்சார வேலை செய்து வருகிறேன்" என்று பதில் அளித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close