நாளை முதல் சென்னையில் விஜயகாந்த் பிரச்சாரம்!

  Newstm Desk   | Last Modified : 14 Apr, 2019 02:54 pm
dmdk-vijayakanth-s-election-campaign-from-tomorrow

தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த், மக்களவைத் தேர்தலையொட்டி, நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலையொட்டி,  அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அவரது மனைவி பிரேமலதா பல்வேறு பகுதிகளில் அதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த தேர்தலின் பிரச்சாரத்தில், விஜயகாந்தும் கலந்துகொள்வார் என்று பிரேமலதா ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில்,  நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக பிரேமலதா தெரிவித்துள்ளார்.

இது தேமுதிக தொண்டர்கள் மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மக்களவை தேர்தலில் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி வைத்து, தேமுதிக 4 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close