ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அதிமுக ரூ.650 கோடி லஞ்சம்: கே.எஸ்.அழகிரி

  முத்துமாரி   | Last Modified : 14 Apr, 2019 02:34 pm
ks-alagiri-press-meet

2016ஆம் ஆண்டு ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள அதிமுக ரூ.650 கோடியை லஞ்சமாக வழங்கியுள்ளது. இந்த ஊழலைக் காட்டி மிரட்டித் தான் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், " அதிமுக, தமிழக பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதை நோக்கமாக வைத்துக்கொள்ளாமல், தங்களது சுயநலத்திற்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். தேர்தலுக்காக எதை வேண்டுமானாலும் பேசுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது ஜெயலலிதா இல்லாததால், வாயை திறக்க சுதந்திரம் கிடைத்துள்ளதால், அவர்கள் வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகிறார்கள். 

உலகமெல்லாம் சுற்றும் பிரதமர் மோடி, தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பின் போது வரவில்லை. ஏன்? ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. 

பணப்பட்டுவாடாவை தடுக்காமல் இந்திய தேர்தல் ஆணையம் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது. தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு கை கட்டி வேலை செய்கிறது. எதிர்க்கட்சி ஆதரவாளர்களை சோதனை என்ற பெயரில் துன்புறுத்துகிறது.

மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் பிரதமரைத் தேர்வு செய்வார்கள் பிரதமரைத் தேர்வு செய்வதில் பாரதிய ஜனதா ஒருபோதும் ஜனநாயக நடைமுறையை பின்பற்றியது இல்லை. 

2016ஆம் ஆண்டு ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள அதிமுக ரூ.650 கோடியை லஞ்சமாக வழங்கியுள்ளது. லஞ்சம் வழங்கியதற்கு ஆதாரமாக வருமான வரித்துறையின் கடித நகல் வெளியாகியுள்ளது. இந்த ஊழலைக் காட்டி மிரட்டித் தான் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது" என்று தெரிவித்தார்.

யாருக்கு அதிமுக லஞ்சம் வழங்கியது என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளிப்படையாக பெயர் எதையும் அறிவிக்காமல் குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close