எட்டு வழிச்சாலை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது: பொன்.ராதாகிருஷ்ணன்

  முத்துமாரி   | Last Modified : 15 Apr, 2019 11:07 am
pon-radhakrishnan-press-meet

மக்கள் விரும்பினால், சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை யாராலும் தடுக்க முடியாது என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

நாகர்கோவிலில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "8 வழிச்சாலை அமைக்க வேண்டும் என மக்கள் விரும்பினால் யார் தடுத்தாலும் திட்டம் செயல்படுத்தப்படும், யார் நினைத்தாலும் தடுக்க முடியாது" என்றார். 

தொடர்ந்து, அதிமுகவை மிரட்டி தான் பாஜக கூட்டணிக்கு பணிய வைத்ததாக ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், "பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போட்டால் தர்மபத்தினி என்பார்கள்; போடவில்லை எனில் மூதேவி என்பார்கள். அதுபோல தான்.  வேட்புமனுத்தாக்களின் போது இல்லாமல், தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில் ஸ்டாலின் இவ்வாறு குற்றம்சாட்டுகிறார்" என்று அமைச்சர் பதிலளித்தார். 

மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மக்களவைத் தேர்தலில், அதிமுக - பாஜக கூட்டணி சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close