ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும்: பன்னீர்செல்வம்

  ராஜேஷ்.S   | Last Modified : 15 Apr, 2019 04:08 pm
case-on-file-stalin-panner-selvam

அவதூறு பரப்பும் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீதும், தவறான தகவல்களைப் பரப்பும் திமுக தலைவர் ஸ்டாலின் மீதும் வழக்கு தொடரப்படும் என்று, தேனியில் இன்று செய்தியாளர்களிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு ஓபிஎஸ் அளித்த பேட்டியில், ‘தேனி காங்கிரஸ் வேட்பாளார்  ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். அவதூறு பரப்பும் அவர் மீது வழக்குத் தொடரவும் முடிவு செய்துள்ளோம். மேகதாது அணை கட்ட தேனியில் இருந்து மணல் அனுப்புதவதாக இளங்கோவன் பேசியுள்ளார். தவறான தகவல்களை கூறுவோர் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

இதேபோல, தவறான தகவல்களை பரப்பும் திமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும் என்றும், தி வீக் பத்திரிகையை சுட்டிக்காட்டி ஸ்டாலின் பொய் குற்றாச்சாட்டுகளை கூறி வருகிறார் எனவும்  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

 

newstm.in
 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close