முதன்முறையாக மாநகராட்சிகளில் பாலங்கள் கட்டியது திமுக தான்: ஸ்டாலின்

  ராஜேஷ்.S   | Last Modified : 15 Apr, 2019 05:40 pm
for-the-first-time-the-bridges-built-in-the-corporation-were-dmk-stalin

முதன்முறையாக மாநகராட்சிகளில் பாலங்கள் கட்டியது சென்னையில் திமுக தான் மேற்கொண்டது என்று, மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின், ‘மத்திய சென்னைக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் கடந்த தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றது. நான் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த போது மாநகராட்சி பள்ளி கட்டிடங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டன. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 10 மேம்பாலங்களை கட்டி இருக்கிறோம். முதன்முறையாக மாநகராட்சிகளில் பாலங்கள் கட்டியது சென்னையில் திமுக தான் மேற்கொண்டது’ என்று பேசினார்.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close