தமிழகத்தில் மோடி ஆட்சிதான் உள்ளது: முதல்வர் சந்திரபாபு நாயுடு

  ராஜேஷ்.S   | Last Modified : 16 Apr, 2019 02:38 pm
modi-government-in-tamil-nadu-chief-minister-chandrababu-naidu

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவது அதிமுக கட்சி தலைமையிலான அரசு அல்லவென்றும் மாறாக நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிதான் நடைபெற்று வருகிறது என்றும் சென்னையில் உள்ள திமுக தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழக -தெலுங்கு மக்களின் உறவு அண்ணன், தம்பி போன்ற உறவு போன்றது ஆகும். நம் நாட்டில் தற்போது ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது. தமிழக மக்கள் மு.க.ஸ்டாலினை முதல்வராக அமர வைத்து அழகு பார்க்க ஆசைப்படுகிறார்கள்’ என்று குறிப்பிட்டார்.

மேலும், வாக்குப்பதிவுக்கு பின்னரும் இயந்திரங்களில் பல்வேறு முறைகேடுகள் செய்யப்படுவதாக குற்றம்சாட்டிய சந்திரபாபு நாயுடு, வாக்களித்த பின்னர், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபிஏடி கருவியிலிருந்து வெளிவரும் ஒப்புகைச்சீட்டை பார்ப்பதற்கென அனுமதிக்கப்பட்டு வந்த 7 வினாடி நேரத்தை 3 வினாடிகளாகக் குறைத்துள்ளதாகவும் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம்சாட்டினார். மேலும் உலகின் 10 சதவீத நாடுகளே தேர்தலில் வாக்களிக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்திவருவதாகவும் சந்திர பாபு நாயுடு கூறியுள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close