தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது

  ராஜேஷ்.S   | Last Modified : 16 Apr, 2019 07:20 pm
election-campaign-finished-in-tamil-nadu

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதி, 19 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான ஒரு மாதமாக அனல் பறந்த தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் திட்டமிட்டு வாக்குகளை சேகரித்தனர். தொகுதிப்பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்புமனு தாக்கல் என தமிழகம் பரபரப்புடன் காணப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தமிழகத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.    

தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளுக்கும், தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகள், புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதியிலும்  நாளை மறுநாள் (ஏப்ரல் 18) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 67,720 வாக்குச்சாவடிகள் உள்ளன; அதில் 7,780 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், புதுச்சேரியில் 222 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை; 25 மிக பதற்றம் நிறைந்தவை என கண்டறியப்பட்டுள்ளது.

பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட வெளி ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டுமென தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி புதுச்சேரியில் மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை அமலில் இருக்கும்.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close