திமுக வேட்பாளரை தகுதிநீக்கம் செய்திருக்க வேண்டும் : அமைச்சர் ஜெயக்குமார்

  Newstm Desk   | Last Modified : 16 Apr, 2019 08:57 pm
election-cancelled-in-vellore-mminister-jayakumar-reaction

வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்யப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை: மாறாக அங்கு திமுக வேட்பாளரை தகுதிநீக்கம் செய்திருக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக, தேர்தல் ஆணையம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. ஆணையத்தின் இந்த நடவடிக்கை குறித்து தமிழக அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:
வேலூர் மக்களவைத் தொகுதியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் அவசரப்படாமல், அலசி ஆராய்ந்து அங்கு தேர்தலை ரத்து செய்யும் முடிவை எடுத்துள்ளது. இதற்கு பதிலாக, வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும்.

வாக்காளர்களுக்கு பணம்கொடுக்கும் பழக்கத்தை திமுக தான் ஏற்படுத்தியது. தற்போது அதிலும் தோற்றுள்ளனர். ஜனநாயகத்தை பணம் கொடுத்து விலைக்கு வாங்கிவிடாமல் என்று நினைத்தவர்களுக்கு வேலூரில் தக்கபாடம் புகட்டப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close