பணப்பட்டுவாடா குறித்து தகவல் அளித்ததே நாங்கள் தான்: தங்க தமிழ்ச்செல்வன்

  Newstm Desk   | Last Modified : 17 Apr, 2019 12:41 pm
thangatamil-selvan-replied-reg-cash-seized-by-it-dept-in-theni-yesterday

"நேற்று தேனியில் வணிக வளாகத்தில் இருந்த பணம் அ.ம.மு.க.வுக்கு சொந்தமானது இல்லை. மாறாக வருமானவரித்துறைக்கு பணப்பட்டுவாடா குறித்து தகவல் அளித்ததே நாங்கள் தான்" என, தேனி தொகுதி அமமுக வேட்பாளர்  தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், அமமுக ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற வருமானவரி சோதனையில், ரூ.1.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாக்காளர் பட்டியலுடன் பணம் இருந்ததாகவும், வருமானவரி சோதனையில் ரூ.1.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.  இது தொடர்பாக, அமமுக மாவட்ட துணைச் செயலாளர் பழனி, சுமன்ராஜ், பிரகாஷ், ஆகியோரிடம்  விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,  இந்த சம்பவம் குறித்து, அமமுக மூத்த நிர்வாகியும், தேனி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நேற்று தேனியில் வணிக வளாகத்தில் இருந்த பணம் அமமுக.,வுக்கு சொந்தமானது இல்லை. அதிமுகவுக்கு சொந்தமான இடத்தில், நாங்கள் ஏன் பணத்தை வைக்க போகிறோம், மாறாக, பணப்பட்டுவாடா குறித்து, வருமானவரித்துறைக்கு தகவல் அளித்ததே நாங்கள் தான். எங்கள் மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நாங்கள் வழக்கு தொடர வேண்டிய அவசியமில்லை. ஆனால், பணம் பறிமுதல் தொடர்பாக எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார்" என்று தெரிவித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close