கரூர் ஆட்சியருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்!

  Newstm Desk   | Last Modified : 17 Apr, 2019 02:04 pm
congress-complaint-against-karur-collector

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரும், அம்மாவட்ட தேர்தல் அதிகாரியான அன்பழகன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தகவல் தெரிவித்துள்ளார். 

திமுக பிரமுகர்கள் தம்மை மிரட்டுவதாக கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேற்று செய்தியாளர்களின் கூறியது மிகவும் பரபரப்பான ஒரு செய்தியானது. செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் தம்மை நள்ளிரவில் மிரட்டியதாக குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, கரூர் ஆட்சியர் அன்பழகன் மீது காங்கிரஸ் தலைமை, டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. ஆட்சியர் அன்பழகன், ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதாக ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது காங்கிரஸ் தலைமை, நேரடியாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தகவல் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close