பணம் பறிமுதல் : தமிழகம் முதலிடம்

  முத்து   | Last Modified : 17 Apr, 2019 09:35 pm
money-seized-tamil-nadu-topped-the-list

 நாடு முழுவதும் பணம் பறிமுதல் செய்யப்பட்ட பட்டியலில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில்,  நாடு முழுவதும் தேர்தல் பறக்கும்படை சோதனையில் இதுவரை ரூ.2, 628.43 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ.514.57 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் பணம் பறிமுதல் செய்யப்பட்ட பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில் பணம் மட்டும் இதுவரை ரூ.208.27 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close