அமமுக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு

  Newstm Desk   | Last Modified : 17 Apr, 2019 09:58 pm
case-registered-on-ammk-candidate

தேர்தல் விதிமுறைகளை மீறி பேட்டி அளித்ததாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அமமுக) வேட்பாளரான தங்க தமிழ்ச்செல்வன் மீது தேனி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, தேனியில் ஒரு வணிக வளாகத்தில், வருமானவரித் துறையினர் நேற்று மேற்கொண்ட சோதனையில் 1.5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக அமமுக மூத்த நிர்வாகியும், தேனி மக்களவை தொகுதி வேட்பாளருமான தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்திருந்தார்.

அப்போது அவர், " தேனியில் வணிக வளாகத்தில் நேற்று பறிமுதல் செய்யப்பட்ட  பணம் அமமுக.,வுக்கு சொந்தமானது இல்லை. அதிமுகவுக்கு சொந்தமான இடத்தில் நாங்கள் ஏன் பணத்தை வைக்க போகிறோம்? மாறாக, பணப்பட்டுவாடா குறித்து வருமானவரித் துறைக்கு தகவல் அளித்ததே நாங்கள் தான். எங்கள் மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்திருந்தார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close