சொந்த ஊாில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தாா்

  ஸ்ரீதர்   | Last Modified : 18 Apr, 2019 09:25 am
cm-palaniswami-turns-up-to-vote-at-salem-booth

வெள்ளை வேட்டி - வெள்ளை சட்டை, விபூதி சகிதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் சிலுவம்பாளையத்தில் வாக்களித்தார்.

முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் ஆகும். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்தான் இன்று காலை 8 மணிக்கு முதல்வர் வாக்களிக்க வருவார் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சரியாக 8 மணிக்கு வெள்ளை வேட்டி, விபூதி என வழக்கமான பளிச்சுடன் வந்தார் முதல்வர். கையில் வெள்ளை கலர் கர்சீப் வைத்திருந்தார். வீட்டுக்கு பக்கத்திலேயேதான் இந்த வாக்கு சாவடி உள்ளது. அதனால் முதல்வர் நடந்தே வந்தார் .

அப்போது ஏராளமான போலீசார் முதல்வரின் பாதுகாப்பு பின் நின்றிருந்தாலும்,அந்த ஊர் மக்கள் ஏராளமானோர் நடந்து போய் கொண்டிருந்தனர். வாக்குச்சாவடிக்கு வந்த முதல்வர், கியூவில் போய் நின்று கொண்டார். அங்கு மக்களோடு மக்களாக இணைந்து தன் வாக்கினை செலுத்திவிட்டு சென்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close