மக்களவை தோ்தல்- அரசியல் தலைவா்கள் வாக்குப்பதிவு

  ஸ்ரீதர்   | Last Modified : 18 Apr, 2019 09:25 am
political-leaders-cast


மக்களவைத் தேர்தலில் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

தமிழம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலர் ஆர்வமுடன் இன்று காலை முதல் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தார். காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் வாக்குப்பதிவு செய்தார்.

இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருவாரூரில் தனது வாக்கை பதிவு செய்தார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமியும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் வாக்களித்தனர்.

இதேபோல் சென்னை பட்டினப்பாக்கத்தில் நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது வாக்கினை பதிவு செய்தார். ஆழ்வாா்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதியுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close