திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தாா்

  ஸ்ரீதர்   | Last Modified : 18 Apr, 2019 10:48 am
dmk-president-mk-stalin-casts-his-vote

தேனாம்பேட்டையில் உள்ள வாக்கு சாவடியில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தாா்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 மக்களவை தொகுதிகள், 19 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது வாக்கினை பதிவு செய்தார்.

வாக்களித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மு.க ஸ்டாலின், தற்போதைய தேர்தல் முக்கியமான தேர்தலாக அமைய போகிறது. ஒட்டு மொத்த வாக்காளர்களும் தங்கள் வாக்கினை பதிவு செய்ய வேண்டும் என்று அவர் தொிவித்தாா்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close