மநீம வேட்பாளார் மகேந்திரன் குடும்பத்தினருடன் வாக்களித்தார்

  ராஜேஷ்.S   | Last Modified : 18 Apr, 2019 11:31 am
mnm-candidatemahendran-s-voted-for-family

கோவை நாடாளுமன்ற தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஆர். மகேந்திரன் பொள்ளாச்சியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.

கோவை நாடளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் துணை தலைவரான ஆர். மகேந்திரன் போட்டியிட்டுள்ளார். கடந்த ஒரு மாதமாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வந்த அவர், இன்று நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது, குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். 

பொள்ளாச்சி தொகுதியில் உள்ள பொன்னாகரம் வாக்குச்சாவடியில் ஆர். மகேந்திரன் தனது வாக்கினை பதிவு செய்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டுகள் ஆன நிலையில், இந்த நாடாளுமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close