வாக்குப்பதிவு இயந்திர கோளாறுகளை பெரிதுப்படுத்தாதீர்கள்: நடிகர் எஸ்.வி சேகர்

  ராஜேஷ்.S   | Last Modified : 18 Apr, 2019 12:15 pm
do-not-magnify-the-voting-machine-mechanisms-actor-sv-shekhar

வாக்குப்பதிவு இயந்திர கோளாறுகளை யாரும் பெரிதுப்படுத்த வேண்டாம். உயர்தர முன்னேற்றத்துடன் ஒரு ஜனநாயகம் உருவாகும்போது சில சிக்கல்களும் பிரச்னைகளும் வருவது சகஜம் என்று நடிகர் எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார்.

தென் சென்னை தொகுதிக்குட்பட்ட பட்டினப்பாக்கம் செயிண்ட் ஜான்ஸ் பள்ளி வாக்குச்சாவடியில் நடிகர் எஸ்.வி சேகர் தனது வாக்கினை பதிவு செய்தார். 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ’வாக்களிப்பது அனைவரது ஜனநாயக கடமையாகும். 100 சதவீத வாக்குப்பதிவு வந்தாலே மக்கள் விரும்பும் ஒரு ஜனநாயக ஆட்சி அமையும். வாக்குப்பதிவு இயந்திர கோளாறுகளை யாரும் பெரிதுப்படுத்த வேண்டாம். உயர்தர முன்னேற்றத்துடன் ஒரு ஜனநாயகம் உருவாகும்போது சில சிக்கல்களும் பிரச்னைகளும் வருவது சகஜம்’ என்றார். 

மேலும், ஒப்புகை சீட்டு இயந்திரம் வைத்துள்ளது ஒரு நல்ல திட்டமாகவே பார்ப்பதாகவும், ஆனால், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் போதிய விழிப்புணர்வும் விளம்பரமும் செய்யவில்லை எனவும் இனிவரும் காலங்களில் தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் எனவும் எஸ்.வி சேகர் தெரிவித்தார்.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close