முதன் முறையாக வாக்களித்த மாற்றுத்திறனாளிகள்..!

  ஸ்ரீதர்   | Last Modified : 18 Apr, 2019 04:03 pm
inmates-of-institute-of-mental-health-chennai-vote-set-example-for-rest-of-india

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள 159 மன  நலம் பாதிக்கப்பட்டவர்கள் இன்று மக்களவை பொதுத் தேர்தலில் வாக்களித்தனா்.

மக்களவைக்கு 2-வது கட்டமாக 12 மாநிலங்களில் 95 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது. இதில் தேனாம்பேட்டை வாக்குச் சாவடியில் 39 வயதான திருநங்கை மேகலா வாக்களித்தார். 

மேலும், தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மன நலம் பாதிக்கப்பட்ட மக்கள் வாக்களித்து வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள 159 மன  நலம் பாதிக்கப்பட்டவர்கள் இன்று மக்களவை பொதுத் தேர்தலில் வாக்களித்துள்ள நிகழ்வு நெகிழ வைத்துள்ளது.

இவர்களில் ஆண்கள் 103 பேரும் பெண்கள் 56 பேரும் அடங்குவர். இவர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதே போல், மாற்றுத் திறனாளிகள் (பார்வையற்றோர்) சென்னை தண்டையார்பேட்டை வாக்குச்சாவடிக்குச் சென்று காவலர்களின் உதவியுடன் வாக்களித்தனர். நெல்லையிலும் 30  பார்வை மாற்றுத்திறனாளிகள் சிறப்பு வாக்கு இயந்திரத்தின் உதவியுடன் வாக்களித்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close