வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுக திட்டம்: திமுக புகார்

  முத்து   | Last Modified : 18 Apr, 2019 04:07 pm
aiadmk-project-to-seized-polling-booths

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆளுங்கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றவுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் டிஜிபியிடம் திமுக புகார் மனு அளித்துள்ளது.

இதுதொடர்பாக திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் அளித்த புகார் மனுவில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆளுங்கட்சியினர் சிசிடிவி கேமராவை செயலிழக்கச்செய்து வாக்குச்சாவடிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளில் காவல்துறையினர் பாதுகாப்பை திரும்பப்பெற உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. எனவே தேர்தல் ஆணையம் உடனே இதை தடுத்தி நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close