தமிழகத்தில் பிற்பகல் 3 மணி வரை 52.02 சதவீதம் வாக்கு பதிவு

  ஸ்ரீதர்   | Last Modified : 18 Apr, 2019 04:27 pm
percentage-of-votes-polled-in-tamil-nadu

தமிழகத்தில்  பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.02 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி தொிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.02 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரபா சாஹூ கூறியுள்ளார்.

அதிகபட்சமாக நாமக்கல்லில் 41.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்றும் தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 55.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்றும் அவர் தொிவித்துள்ளார்.

மக்களவை தோ்தலில் வடசென்னையில் 41.16 சதவீதமும், மத்திய சென்னையில் 44.38 சதவீதமும், தென் சென்னையில் 36.74 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close