சிதம்பரம் தொகுதியில் 70 சதவீத வாக்குப்பதிவு

  Newstm Desk   | Last Modified : 18 Apr, 2019 06:53 pm
chidambaram-constituency-tops-on-voting-in-tn


தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவில், இன்று மாலை 5:00 மணி நிலவரப்படி, சிதம்பரம்(தனி) தொகுதியில், 70 சதவீத வாக்குகள் பதிவாகின. 

நாட்டின், 17வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு, தமிழகத்தில் உள்ள, 37 தொகுதிகளில் இன்று நடைபெற்றது. அதில், இன்று மாலை, 5:00 மணி நிலவரப்படி, மாெத்தம், 63.73 சதவீத வாக்குகள் பதிவாகின. 

மாலை 5:00 மணி நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, சிதம்பரம் தொகுதியில், 70.73 சதவீத வாக்குகள் பதிவானதாக, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்த தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனும், அதிமுக சார்பில், சந்திரசேகரும் போட்டியிடுகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close